தஹி சர்ச்சை; அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்- அண்ணாமலை.!
தயிர் பாக்கெட்களில் தஹி என குறிப்பிடவேண்டும் என்ற FSSAIவின் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அண்ணாமலை கடிதம்.
தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது அச்சிட FSSAI அறிவுறுத்தி இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மோடி தலைமையிலான அரசு எப்போதும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி தமிழ் மொழியின் வளமை குறித்தும் அதன் இலக்கியம் குறித்தும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAIயின் இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் கொள்கையுடன் இணைந்து செயல்படுவதுபோல் தெரியவில்லை, எனவே FSSAI இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.