ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக தேர்தலுக்கும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்புள்ள இல்லை என டெல்லியில் செய்தியாளர் கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.
திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.
தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 1, 2021