சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், விநியோகஸ்தர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.இவ்வாறு தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தின் உரிமம் ஆனது ரத்து செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மனுவில் தெரிவித்துள்ள நிலையில்.
வழக்கு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…