வாடிக்கையாளர்களிடம் கமிஷன் வசூலித்தால் உரிமம் ரத்து.!எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

Default Image

சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், விநியோகஸ்தர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  தெரிவித்துள்ளது.

Image result for சிலிண்டர் டெலிவரி

சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Image result for சிலிண்டர் டெலிவரி

அந்த மனுவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.இவ்வாறு தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தின் உரிமம் ஆனது ரத்து செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மனுவில் தெரிவித்துள்ள நிலையில்.

Image result for சிலிண்டர் டெலிவரி

வழக்கு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்