சிலிண்டர் விலை உயர்வு : மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்! – பீட்டர் அல்போன்ஸ்
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்குசுமார்₹300 கூட்டிய சாதனை மன்னர் சரித்திரநாயகர் மோடிஜிக்கு நன்றி.மிக அதிகமாக விலை உயர்த்திய அரசுகளுள் முதலிடம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.மகிழ்ச்சீஈஈஈஈஈ மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்!’ என பதிவிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்குசுமார்₹300 கூட்டிய சாதனை மன்னர் சரித்திரநாயகர் மோடிஜிக்கு நன்றி.மிக அதிகமாக விலை உயர்த்திய அரசுகளுள் முதலிடம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.மகிழ்ச்சீஈஈஈஈஈ
மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்!???? pic.twitter.com/kMgIwbUAvB— S.Peter Alphonse (@PeterAlphonse7) September 1, 2021