யாஸ் புயல் எதிரொலி.., 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
யாஸ் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2- எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. பின்னர், நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது.
இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஒரிசா – மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை நாளை மறுநாள் அதிதீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நான்கு நாட்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாக உள்ள யாஷ் புயல் எதிரொலியாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2- எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.