அரபிக்கடலில் உருவாகியது "வாயு" புயல்!தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
வாயு புயல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் தென்மேற்கு பகுதியில் 680 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,தற்போது புயலாக மாறி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர் அருகே 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது.இதனால் மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாயு புயலால் தமிழகம் ,கர்நாடகம்,கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தில் மட்டும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.