முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Chennai flood relief 2023 - Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது.

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி

ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு குடும்ப ரேஷன் கார்டுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , 6000 ரூபாய் நிவாரண உதவி தொகையானது சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டும். டோக்கன் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என கூறினார்.

அடுத்து, வெளியூரில் இந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்களுக்கான நிவாரண தொகை பற்றிய கேள்விக்கு, முதலில் உள்ளூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் அடுத்து, வெளியூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை பார்க்கும் வெளியூர்வாசிகள் அந்தந்த பகுதி ரேஷன் கடைக்கு வந்து விண்ணப்பம் பெற்று நிரப்பி தர வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்