#Breaking : மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு.!
மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அந்த வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 550 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கு 460 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது.
அந்த நகரும் வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு 65கிமீ – 75கிமீ வேகத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் சமயம் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.