#Breaking : மாண்டஸ் புயல் 10கிமீ வேகத்தில் நகர்கிறது.!
இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயலானது, தற்போது வேகம் குறைந்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ்புயல் தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து 210 கிமீ வேகத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ வேகத்திலும் உள்ள மாண்டஸ் புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த புயலானது, தற்போது வேகம் குறைந்துள்ளது. இந்த வேகம் குறைவுக்கும், புயலின் தீவிர தன்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், கடல் பரப்பில் உள்ள தன்மை குறித்து அதன் வேகம் மாறுபடும் என்று மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வடதமிழகத்தை நெருங்குவதால் சென்னை மற்றும் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மலை பிரதேசங்களில் உள்ளது போல 22 டிகிரி வெப்பநிலை தான் நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டா – புதுச்சேரி கடற்கரைக்கு அருகே மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.