ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இந்த மாவட்டங்களில் நாளையும் மின்தடை? ஃபோன சார்ஜ் பண்ணிக்கோங்க…!
தமிழகத்தில் நாளை (டிச.-1) ஞாற்றுக்கிழமையிலும் மின்தடை ஏற்படும் சூழல் என்பது உருவாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயலின் முன்புறம் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் முன்னதாகவே மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும், ஒரு சில இடங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி, நாளை (டிச.-1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என்றால் அங்கு மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதே போல, இன்று (நவ-30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கும் ஒரு சில இடங்களில் குறிப்பாக சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி மின்தடை ஏற்படுமானால், வீசும் காற்றின் தீவிரம் குறைந்த பிறகும், தேங்கி நிற்கும் வெள்ளம் முழுவதுமாக வடிந்த பிறகும் தான் மின் இணைப்பு மீண்டும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மக்கள் கனமழை, ரெட் அலெர்ட் பிறப்பித்துள்ள மக்கள் தங்களது ஃபோன்களை மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.