ஃபெஞ்சல் புயல் : கனமழை எங்கு பெய்யும்? சென்னை நிலை என்ன? வெதர்மேன் அப்டேட்!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக புதுச்சேரி பகுதியில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக எந்தெந்த பகுதியில் வானிலை எவ்வாறு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , “ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக பாண்டிச்சேரி பகுதியில் கனமழை பெய்யும்.
அதே நேரம் மேக கூட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றுள்ளன. அங்கு நாளை காலை வரை மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
ஃபெஞ்சல் புயல் தற்போது பலத்த காற்றுடன் கரையை கடந்து வருகிறது. அங்கு மேகக்கூட்டங்கள் கலைந்துள்ளன. புதுச்சேரி பகுதியில் 100கிமீ அளவுக்கு காற்று வீசி வருகிறது.” என பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Heavy rains in Pondy while small cells of clouds are pushed into KTCC. Till morning gusty winds and short spells of rains will be the pattern for KTCC.
Cyclone Fengal is very close to the coast and is completely sheared with no clouds on sea side.
Pondy century has been crossed… pic.twitter.com/69qyAG0OMW
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024