ஃபெஞ்சல் புயல் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் உதவி!

தவெக தலைவர் விஜய், பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்

TVKVijay

சென்னை : ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதத்தை உண்டு செய்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குவதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி, சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜய் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

கிட்டத்தட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் (பனையூர்) வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக  கூறப்படுகிறது. சொந்தமாக பேருந்து ஒன்றை அனுப்பி அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து வந்து அவர்களிடம் அமர்ந்து  பேசி குறைகள் என்னவெல்லாம் என்பது பற்றி கேட்டுவிட்டு  நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறார்.

மேலும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கியதை தொடர்ந்து விஜய் அடுத்த கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை- க்கு நேரில் சென்று வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே போலவே கடந்த ஆண்டு தூத்துக்குடியில் கனமழை பெய்த போது அங்கு நேரடியாக சென்று விஜய் மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியிருந்தார். அதைப்போலவே இந்த முறை சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு நேரில் அழைத்து நிவாரண உதவி வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்