ஆட்டத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (2 டிசம்பர்) வட உள் தமிழகம் அதே பகுதியில் நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு கடற்கரைகளுக்கு
2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ வேகத்தில் தென் தமிழகக் கடற்கரை, கொமோரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் நிலவும். 04-12-2024 முதல் 06-12-2024 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்
02-12-2024 முதல் 06-12-2024 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்
02-12-2024: கேரள தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-12-2024: கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04-12-2024: லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05-12-2024: மத்தியகிழக்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06-12-2024: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.