அதி தீவிர புயலாக வலுப்பெறும் பிபோர்ஜாய் புயல் 15-ந்தேதி கரையை கடக்கும்.!
மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான ‘பிபோர்ஜாய்’, அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது.
மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, ஜூன் 15ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் சூறாவளிக்காற்று:
- இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 180 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- அதன் பிறகு, மாலை முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- குஜராத் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.