சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்த கும்பல் அங்கு கொள்ளையில் ஈடுபட்டது.இந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சயன், மனோஜ், தீபு உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டனர் . பின்னர் சயன், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புப்படுத்தி இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது .இதில் சயன், மனோஜ் ஆகியோரது பேட்டிகள் இடம்பெற்றது. இதனையடுத்து இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
எனவே நீலகிரி மாவட்ட நீதிமன்றம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ளதால், ஜாமீன் தந்தால் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க அவசியம் இல்லை என்றும் காவல்துறை கூறியது. வாதங்களை கேட்ட நீதிமன்றம் ,சயன், மனோஜ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…