திருக்குறள் விவகாரம்.! பிரதமர் செய்வது நடிப்பு.. நாடகம்… அதிமுக முன்னாள் அமைச்சர் விளாசல்.!

PM Modi

CV Shanmugam : திருக்குறளை ஏன் தேசிய நூலாக பிரதமர் அறிவிக்கவில்லை என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார் .

திண்டிவனத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி பற்றியும், திருக்குறள் பற்றியும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார்.

அவர் பேசுகையில், 10 வருடமாக மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இதனால் அவர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. மேலும், அதானி, அம்பானி தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மூன்று வேளையில் ஆறு முறை துணி மாற்றுகிறார் பிரதமர்.

400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலை தற்போது 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டு, தற்போது 100 ரூபாய் குறைக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கிறார்கள். 13 லட்சம் அரசு வேலை தற்போது வரை காலியாக உள்ளது. அதனை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவை கடுமையாக விமர்சித்த கட்சிகள் தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்து ள்ளனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுத்தார்கள். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட நகராக அறிவித்தது அதிமுக ஆட்சிக்காலத்தில் தான். மேலும் இதனால் 5 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியாக சுற்றுசூழலை பாதுகாக்க ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான்.

பிரதமர் மோடி தமிழக வரும்போதெல்லாம் திருக்குறள் பேசுகிறார். வெளியூர் சென்றும் பல இடங்களில் திருக்குறளை குறிப்பிடுகிறார். குஜராத் சென்றால் அங்கு வேறு விதமாக பேசுகிறார். அதே போல மற்ற மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநிலங்களில் வேறு விதமாக பேசுகிறார். திருக்குறள் பற்றி பல இடங்களில் குறிப்பிடும் பிரதமர் மோடி திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கவில்லை.? எல்லாம் அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல் நடிப்பு, நாடகம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்