புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ரோடியர் மில் (AFT ) திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது சிவி சண்முகம் கூறியதாவது, 80க்கு பிறகு புதுச்சேரியை காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, பாஜக தான் ஆண்டு வருகிறார்கள்.
40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் இவர்களால் புதுச்சேரியில் எந்த வளர்ச்சியாவது இருக்கிறதா? என்றும் புதுச்சேரியில் கூட்டணி அரசுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தை மத்திய பாஜக அரசு பறிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு சிதைகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் என்ஆர் காங்கிரஸ் ஏன் இன்னும் மாநில அந்தஸ்து வாங்கி கொடுக்கவில்லை. கேரளா, கர்நாடகா முதல்வர்கள் டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெறும் வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் ஏமாந்து, மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார், நகராட்சி சேர்மன் ஆகி விடுவார். புதுச்சேரி மக்களை முதல்வர் ரங்கசாமி ஏமாற்றி வருகிறார். இதனால், நன்றாக சிந்தித்து பார்த்து மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…