சிவி சண்முகம் மனு – டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை தர உயர்நீதிமன்றம் ஆணை.
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை தர ஆணையிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலின்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் 2006-ம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என மனுவில் கூறியுள்ளார். இந்த சமயத்தில் நவம்பர் 2021-ல் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சிவி சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
மீண்டும் காவல்துறை பாதுகாப்பு கோரி தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு அளித்த மனு மீது ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை என சிவி சண்முகம் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிவி சண்முகம் மனு தொடர்பாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.