ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்தது . இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது.
இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் சிலவை திருடப்பட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணையை சிபிசிஐடி போலீசார் கையாண்டனர். ஏற்கனவே, புகார் மீதான விசரணையை சி.வி.சண்முகம் அவர்களிடம் நடத்தினர். தற்போது மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து, சி.வி.சண்முகத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் வந்துள்ளது.
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…