நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு நேற்று அறிவித்தது. இதுதொடர்பான அறிக்கையில், “நீட் தேர்வில் (cutoff) பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்,” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3-ஆவது கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3-ஆவது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வின் அர்த்தத்தையே மத்திய அரசின் அறிவிப்பு கேலிக்கூத்தாக்கி விட்டதாக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பால் நீட் தேர்வு நடத்தப்படுவது அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஜீரோ எடுத்திருந்தாலும் மருத்துவ முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட் – ஆப் பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நீட் தேர்வு என்பதே பயிற்சி மையங்களுக்கும், தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்துவது என்பதாகி விட்டது.
நீட் தேர்வால் பயன் ஏதும் இல்லை என்று மத்திய ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, NEET என்பதில் ELIGIBILITY என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது மத்திய அரசு. முதுநிலை நீட் கட் ஆப்பை ஜீரோவாக குறைப்பதால் நுழைவுத்தேர்வில் தகுதி அர்த்தமற்றது என்பதை அரசு ஏற்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஏராளமானோர் உயிரை மாய்த்து கொண்ட போதிலும் மத்திய அரசு இதயம் அற்றதாக இருக்கிறது. உயிர் குடிக்கும் நீட் தேர்வை நீக்க வேண்டும், நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதால் பாஜக அரசை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…