திருச்சியில் 2 பிரபல நகைக்கடைகளில் சுங்கத்துறை 6மணி நேரமாக சோதனை.!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள தூதரக முகவரிக்கு வந்த பெட்டி ஒன்றில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், ஸ்வப்னா சுரேஷ் ,சந்தீப் நாயர் ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள 2 பிரபல நகைக்கடைகளில் தேசிய புலனாய்வு முகமை உத்தரவின் பேரில் 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு 6 மணி நேரமாக சோதனை செய்து வருகின்றனர்.
ஸ்வப்னாவுடன் தொடர்பு உள்ளதா..? எனவும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.