வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது – முத்தூட் நிறுவனம்.!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.7 கோடி தங்க நகைகள் கொள்ளை தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டது. அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது.
பாகலூர் சாலையில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. குற்றவாளிகள் தப்பி கர்நாடக சென்றதாக ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும், நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முத்தூட்டு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொள்ளை சம்பவத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஓசூர் கிளை விரைவில் மீண்டும் செயல்படும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025