ஊரடங்கில் கறிவிருந்து சமைத்து சாப்பிட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார். பின் ஜாமினில் விடுவிப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம். வீராணம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கறிவிருந்து சமைத்து, தனிமனித விலகல் இன்றி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை அந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்த வீராணம் போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி, எச்சரித்து அவர்களை ஜாமினில் விடுத்துள்ளனர். இதேபோல், தஞ்சை மாவட்டம் சென்னம்பட்டி கிராமமதை இளைஞர்களும் கறிவிருந்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், இவ்வாறு அலட்சியப்போக்குடன் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…