1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
கடந்த சில மாதங்களாக கொரானா ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே இருப்பதால் பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
முக்கிய பகுதிகளில் மாற்றமின்றி விரிவான விளக்கங்களை குறைக்கும் பணி நடைபெற்றுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாட வாரியாகவும் வகுப்பு வாரியாகவும் 40 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து முழு விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.