Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு.
ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆர்வத்துடன் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 51.41% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தருமபுரியில் 67.52%, நாமக்கல்லில் 67.37%, ஆரணியில் 67.34%, கள்ளக்குறிச்சியில் 67.23%, கரூரில் 66.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுபோன்று, குறைந்தபட்சமாக தென் சென்னை 57.04%, மத்திய சென்னை 57.25%, வட சென்னையில் 59.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணிவரை 56.68% பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்று, அதுதொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு…
டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து 'லாபத்தா லேடீஸ்' திரைப்படம் வெளியேறியது. திருமணம்…