மூளையில் ரத்த கசிவு.? ‘ஈஷா யோகா மையம்’ சத்குருவுக்கு என்னாச்சி.?
Sadhguru : ஆன்மீக குருவாக அறியப்படும் கோவை ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து நேற்று முதலே, நரம்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வினித் சூரி அவர்களும், சிகிச்சை முடிந்த பின்னர் சத்குருவும் வீடியோ மூலம் தெளிவுபடுத்தினர்.
கடந்த நான்கு வாரங்களாக சத்குரு ஜக்கிவாசுதேவ் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், கடந்த மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரி விழா இருந்ததால் அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 40 வருடங்களாக சிவராத்திரி விழாவை தான் தவறவிட்டதில்லை என சத்குரு மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
Read More – அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… முதல் முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு!
சிவராத்திரி முடிந்த பின்னர், கடந்த வாரத்தில் மீண்டும் சத்குருவுக்கு தலைவலி அதிகமாகிவிட்டது. இதனை அடுத்து, அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி அறிவுரையின்படி , சத்குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளை பகுதியில் ரத்த கசிவு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் சேர்ந்து சத்குருவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்தனர். டாக்டர் வினித் சூரியின் கூறியபடி, ‘ சத்குரு உடல்நிலை தற்போது சீரான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் விரைவாக குணமடைந்து வருகிறார். அவரை அவரே குணப்படுத்தி வருகிறார் என கூறினார்.
Read More – உலகின் மகிழ்ச்சியான நாடு… 7வருடங்களாக தொடரும் சாதனை… இந்தியாவின் நிலைமை.?
நேற்று (புதன்கிழமை) சத்குரு தனது சமூகவலைத்தள பக்கத்தில் மருத்துவமனை படுக்கையில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எனது தலையில் அறுவை சிகிச்சை செய்து எதையோ கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அது முற்றிலும் காலியாக இருந்தது என சிரித்துக்கொண்டே கூறினார். தற்போது நலமாக இருப்பதாகவும் சத்குரு கூறினார்.
சத்குரு உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும், உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு சத்குரு தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நன்றி தெரிவித்துள்ளார்.