கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!
கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு உள்ளாகிய மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக இருப்பதாக பேசியுள்ளார்.

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷை கொலை முயற்சி, ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் நேற்று மாலை அவருடைய உடல்நிலை நலமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவலையும் தெரிவித்து இருந்தார். நேற்று பேசமுடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி இன்று தெம்பாகத் தான் நலமுடன் இருப்பதாகப் பேசியுள்ளார்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். நேரில் சென்று அவரிடம் உங்களுடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என விசாரித்தார்.
அப்போது மருத்துவர் பாலாஜி ” நான் நலமாக இருக்கிறேன். என்னால் நன்றாகச் சாப்பிடமுடிகிறது. எனக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர்” எனக் கூறி மீண்டு சாதாரணமாக உணவு உட்கொண்டு தான் நலமாக இருப்பதை வெளிக்காட்டினார்.
மருத்துவர் பழைய நிலைக்குத் திரும்புவதால் மா.சுப்பிரமணியன் அவருக்கு தன்னுடைய கைகளைக் கொடுத்து முழுவதுமாக குணமடையவேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் இன்று மதியம் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் நலமுடன் உள்ளார், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/nSLl6E4Qxo
— Subramanian.Ma (@Subramanian_ma) November 14, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025