#BREAKING: ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்
ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கு, உரிய அனுமதி வந்தபின் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.