சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை.
அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்க்கு நாம் தமிழர் கட்சி, திராவிடர் கட்சி போன்ற காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சி சாரா அமைப்புகளும் மற்றும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நாம் தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, சிபிஐ (எம்.எல் விடுதலை), அ.தி.ம.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் இந்த மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கப்போவதாக முன்வந்து அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…