பொள்ளாச்சி அருகே ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவருக்கு அறிவுரை கூறியவர் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பரின் மகன் தான் நந்தகுமார். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நந்தகுமார் பணியாற்றி வருகிறார். நந்தகுமாரின் உறவினரான கிருஷ்ணகுமார் என்பவர் ஓட்டுநராக பணி புரிபவர். இவருக்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் அதிகம் உள்ளதால், அந்த ஊரிலுள்ள மற்றொரு வாலிபருடன் காட்டுப்பகுதியில் தவறான உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அந்த ஊர் மக்கள் பல முறை பார்த்ததால் ஒரு முறை இருவரையும் கையும் களவுமாக பிடித்து அதட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் கிருஷ்ணகுமாரின் உறவினரான நந்தகுமாருக்கு தெரியவந்துள்ளது. எனவே, க்ருஷ்ணகுமாரை அழைத்த நந்தகுமார் இது குறித்து அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். எனவே நந்தகுமார் மீது ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நந்தகுமாரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து காவலர்கள் கிருஷ்ணகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…