தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மளிகை கடைகள், காய்கறிகள், இறைச்சி கடைகள் போன்றவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
மேலும் மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்பவர்கள் இணையத்தில் பதிவு செய்தபின் பணிக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து e-pass பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசின் இப்பதிவு தளத்தில் ஒரே நேரத்தில் பலரும் இப்பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால், அரசின் இப்பதிவு இணையதளம் முடங்கியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…