#BREAKING: ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்..!

- ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சி அளிக்கிறது.
- இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
கொரோனாதொடர்பான பல்வேறு வழக்குகள் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நாள்தோறும்நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் தெரு ஓரங்களில் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சிவா என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அரசு தரப்பில் ஒரு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கைவிடப்பட்ட விலங்குகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அந்த விலங்குகளுக்கு என்ன உணவு வசதி ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி, ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை. ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது. வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பித்தார். கொரோனா முதல் அலையின் போது போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.
தற்போது கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர். மக்கள் கூட்டம் அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025