சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியது.முன்னதாக நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதாவது சிவப்பு மண்டலமான சென்னையில் 10% பணியாளர்களை கொண்டு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (இந்த தளர்வு Containment Zone-னிற்கு பொருந்தாது)சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல தடையில்லை உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில்,மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…