ஊரடங்கு தளர்வு – முதல்வர் பழனிசாமி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.!
மாநில அரசு அறிவிக்கும் வரை தற்போதைய உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தத நிலையில், தற்போது ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முடிவடைய இருந்த ஊரடங்கை வரும் 30ம் தேதி வரை நீடிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தாக்கம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், மே 3 ஆம் வரை ஊரடங்கை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதில் ஏப்ரல் 20 க்கு பிறகு (இன்று) ஊரடங்கில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் மாநில அரசுகள் கொரோனாவின் தாக்கத்தை ஆராய்ந்து ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்று கூறியிருந்தது. அந்த வகையில் மாநில அரசு அறிவிக்கும் வரை தற்போதைய உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தத நிலையில், தற்போது ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.