#BigBreaking:ஊரடங்கு நீட்டிப்பு; அரசு தேர்வுகள் நடத்த அனுமதி…!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 19-7-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தளர்வுகளின் படி,மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
- இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.