தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..!
இன்று காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முதலல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதில் கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
இதனால், இன்று காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்தமுறை தளர்வுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் உள்ள தளர்வுகளை விட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.