தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு – இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவு.

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், சிலவற்றிற்கு இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு – இவற்றுக்கெல்லாம் இன்று முதல் செயல்பட அனுமதி:

  • நீண்ட மாதங்களாக மூடப்பட்டியிருந்த திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில்,  நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
  • இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் இன்று முதல் இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
  • தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில், பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2. FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சியாளர்களுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதிக்கப்ட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

6 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

7 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

7 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

8 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

8 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

9 hours ago