#BREAKING புதுச்சேரியில் நிவர் புயலால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு.!
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை வரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், 26-ந்தேதி காலை 6 மணி வரை இத்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பால், மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் நலன் கருதி இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரிஅரசு தெரிவித்துள்ளது
இதற்கிடையில், புதுச்சேரியில் நிவர் புயல் நெருங்குவதால் எச்சரிக்கை கூண்டு எண் 7 ஏற்றபட்டுள்ளது. 7-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்றும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.