தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் மற்றும் பீலாராஜேஷ் பங்கேற்றுள்ளனர். அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது என்றும் தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…