தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…! தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்….!

Published by
லீனா

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தொற்று குறைந்த அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி,திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி,தூத்துக்குடி, விழுப்புரம்,வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணிவரை நேர தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ சலவை தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கணினி வன்பொருட்கள் மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software. Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட    அனுமதிக்கப்படும்.
  • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
Published by
லீனா

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…

8 minutes ago

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…

34 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

54 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

56 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

1 hour ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

1 hour ago