தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! அரசின் இ-பதிவு தளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதி…!
- தமிழகத்தில் தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு.
- அரசின் இ-பதிவு தளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதி.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மளிகை கடைகள், காய்கறிகள் கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை திறக்கலாம் என்று, மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் இ-பதிவு பெற்று வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவசரத் தேவைக்காக வெளியில் செல்பவர்கள் எந்த வாகனத்தில் செல்கிறார்கள் என்று பதிவு செய்து செல்ல முடியும். அதாவது ஆட்டோ, இருசக்கர வாகனம், பேருந்து, கார், வாடகை கார், இன்னோவா, எஸ்யூவி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அதைப் பதிவு செய்து செல்ல கூடிய வசதி, தற்போது அரசின் இ-பதிவு இணையதளத்தில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.