ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

Default Image

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரான் தொற்று இதுவரை 50 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்