தமிழகத்தில் அடுத்த வாரம் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றிக்கு தடை இருந்தாலும், பலவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது மற்றும் ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சில பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவதால் அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அதிகரிகளுடனான ஆலோசனை முடிந்த பின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…