ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது – கமல்ஹாசன் அறிக்கை
ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.இதனால் தமிழக முதலமைச்சர் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது .முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை . அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Makkal Needhi Maiam Party President Mr @ikamalhaasan Press Release on Current Lockdown.#PressRelease #MakkalNeedhiMaiam pic.twitter.com/JeyjALzBwK
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 19, 2020