#Breaking: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் தொடர் ஊடரங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு நாளை (23.3.2020) காலை 5 மணி வரை தொடரும்.
ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.#JanataCurfew #TamilNadu #TNGovt #TN_Together_AgainstCorona pic.twitter.com/MoePtykViE
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 22, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாட்டின் நன்மைக்காக பிரதமர் மோடி இன்று சுய ஊரடங்கு பின்பற்றுவோம் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊடரங்கு பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் சுய ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முழு அடைப்பை அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.