செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டில் வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள்( working men/women hostel)கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி ரத்துசெய்து தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி மறுப்பு என் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…