தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ..!

Default Image

தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை ஜூலை 31 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று  காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 31-7-2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Saif Hassan
seeman with prabhakaran
Bgg boss season8
Kho Kho Worldcup 2025 champions - India mens team and India Women team
TVK Leader Vijay vist Parandur
Morocco stray dogs shootout