தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு..!#tnlockdown | #TNGovt | #lockdownextension | #mkstain | #LockDown pic.twitter.com/ReL2L92w78
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 10, 2021