17 ஆம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கு ! முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம்.சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற இடங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களை ஆகஸ்ட் 1-ஆம் தேதி திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இதனிடையே 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது.ஆனால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.